இங்கிலாந்தில் அடித்துக்கொல்லப்பட்ட குழந்தையின் கடைசி பேச்சு – கேமராவில் பதிவாகிய கொடூர சம்பவம் – Dinaseithigal

இங்கிலாந்தில் அடித்துக்கொல்லப்பட்ட குழந்தையின் கடைசி பேச்சு – கேமராவில் பதிவாகிய கொடூர சம்பவம்

இங்கிலாந்தில் தன் தந்தையாலும் மாற்றாந்தாயாலும் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு ஆறு வயது சிறுவனின் கடைசி தருணங்களைக் காட்டும் காணொளி ஒன்று வெளியாகி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள சோலிஹல் என்ற இடத்தைச் சேர்ந்த Thomas Hughes (29) என்பவரும், அவரது மனைவியான Emma Tustin (32) என்ற பெண்ணும், Thomasஇன் மகனாகிய Arthur Labinjo-Hughes (6) என்ற சிறுவனை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, Arthurஇன் மாற்றாந்தாயாகிய Emma, குழந்தையின் தலையை சுவரில் மோதியடித்துக் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதில் பல நாட்களாக Arthurஐ இருவரும் கொடூரமாக சித்திரவதைப்படுத்தியிருக்கிறார்கள். இதில் அவனை நீண்ட நேரம் நிற்கவைப்பதும், அவனது சாப்பாட்டிலும் குடிக்கும் பானங்களிலும் உப்பை நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அளவுக்கு கூடுதலாக போட்டு அவனை சாப்பிட நிர்பந்தப்படுத்தியது முதல், அவனை அடித்து நொறுக்கி, அவனது தலையை சுவற்றில் மோதி பல்வேறு சித்திரவதைகளை செய்துள்ளார்கள் Thomas மற்றும் Emma ஆகிய இருவரும் . இப்படியிருக்கும் நிலையில், குழந்தை கொல்லப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு அவன் கடைசியாக பேசிய வார்த்தைகளும், சிசிடிவியில் பதிவான காட்சிகளும் கோர்ட்டில் ஓடவிட்டு காட்டப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *