2022-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் – Dinaseithigal

2022-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் உள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *