1 லட்சத்து 1,474 பேருக்கு புதிதாக ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிய தமிழக முதல்வர் – Dinaseithigal

1 லட்சத்து 1,474 பேருக்கு புதிதாக ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிய தமிழக முதல்வர்

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், மாநில அளவில் 1,01,474 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடும் விதமாக, இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 48,077 பயனாளிகளுக்கும், இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1,359 பயனாளிகளுக்கும், இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 4,346 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 14,739 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 28,209 பயனாளிகளுக்கும், முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2,397 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1,732 பயனாளிகளுக்கும், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 554 பயனாளிகளுக்கும், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 61 பயனாளிகளுக்கும், என மொத்தம் 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *