தற்போது பெண் புலம்பெயர்ந்தோருக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு ஏற்பாடு – Dinaseithigal

தற்போது பெண் புலம்பெயர்ந்தோருக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு ஏற்பாடு

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்படுவதற்காக காத்திருக்கும் பெண் புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாட்டு பெண் குற்றவாளிகளுக்காக, தனியாக புலம்பெயர்வோர் காவல் மையம் ஒன்றை ஏற்படுத்தும் திட்டத்தை பிரிட்டனின் உள்துறைச் செயலர் உறுதிப்படுத்தியிருக்கிறார் .இதையடுத்து இங்கிலாந்திலுள்ள டெரவ்ன்ட் சைட் என்ற இடத்தில் பெண்களுக்கான அந்த புதிய புலம்பெயர்வோர் காவல் மையம் ஏற்படுத்தப்படவிருப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் கூறியுள்ளார் . மேலும் அந்த புலம்பெயர்வோர் காவல் மையம், இந்த ஆண்டு, அதாவது, 2021 இறுதிக்குள் அமைக்கப்பட்டுவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார் . ஆயினும் , அந்த புலம்பெயர்வோர் காவல் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர்கள் அந்த புலம்பெயர்வோர் காவல் மையம் உருவாக்கப்பட இருக்கும் இடத்தின் அருகே கூடி, ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *