முகத்தில் இருக்கும் முடியை போக்க சில எளிய வழிகள்..!! – Dinaseithigal

முகத்தில் இருக்கும் முடியை போக்க சில எளிய வழிகள்..!!

உருளைக்கிழங்கை ஜூஸ் செய்து அதில் கொஞ்சம் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின் இவற்றை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தேய்த்து விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடுங்கள். முகத்திலிருந்து முடி தானாக உதிர்வதை பார்க்க முடியும்.

இரண்டு ஸ்பூன் எலுமிச்சை மற்றும் சர்க்கரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து விடுங்கள். நீர் கொதித்து வரத் தொடங்கும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள். பின் சூடு குறைந்ததும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். முடி உதிர்வதை நீங்களே உணர்வீர்கள்.

ஒரு வாழைப்பழமும் மையாக அரைத்த ஓட்ஸ் இரண்டு ஸ்பூனும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேன் கலந்து மூன்றையும் பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது உங்கள் முகத்தில் இருக்கும் முடியை நீக்குவது மட்டுமல்ல முகத்திற்கு பொலிவான தோற்றத்தை உருவாக்கும்.

ஒரு ஸ்பூன் முட்டையில் உள்ள வெள்ளைக்கரு, சோள மாவு, சர்க்கரை மூன்றையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த மிக்ஸ் செய்த கலவையை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காய விடுங்கள். 15நிமிடம் கழித்து இது தானாக முகத்திலிருந்து உதிர்ந்து விழும். அப்போது முற்றிலும் நீக்கிவிட்டு முகத்தைக் கழுவிவிடுங்கள். இதை வாரம் மூன்று முறை செய்து வந்தால் முடி தானாக உதிரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *