விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வர்த்தகர் – Dinaseithigal

விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வர்த்தகர்

இலங்கையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சட்டவிரோதமான முறையில் அதிகபட்ச ரொக்கப்பணத்தை துபாய்க்கு கொண்டு செல்ல முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சந்தேகநபரிடமிருந்து ஒரு கோடியே 40 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா மதிப்பிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச நாணயம் பிடிக்கப்பட்டதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. துபாய் போவதற்காக வந்திருந்த இந்த நபர் பயணப் பெட்டியில் சூட்சுமமாக வைத்து பணத்தொகையை கொண்டுசெல்ல முயற்சித்ததாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *