கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடன இயக்குனர் சிவசங்கர் – Dinaseithigal

கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடன இயக்குனர் சிவசங்கர்

தென்னிந்திய திரையுலகில் மிக பேமஸான நடன இயக்குனர் சிவசங்கர். இவருடைய நடனத்திற்கு இதுவரை யாரும் ஈடுகட்ட முடியவில்லை என்று சொல்லலாம். இதுவரை இவர் பத்து மொழிகளில் சுமார் 800 படங்களுக்கு மேல் நடனம் ஆடி இருக்கிறார் . சினிமாத்துறையில் மூத்த நடனக்கலைஞரான சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை. இதையடுத்து அவரது மகன் அஜய் கிருஷ்ணன் மருத்துவ செலவுக்கு உதவுமாறு சமூக வலைத்தள பக்கத்தில் உதவி கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *