தற்போது எண்ணித் துணிக படத்தின் டப்பிங் வேலைகளை நிறைவு செய்த நடிகர் ஜெய் – Dinaseithigal

தற்போது எண்ணித் துணிக படத்தின் டப்பிங் வேலைகளை நிறைவு செய்த நடிகர் ஜெய்

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் நடிகர் ஜெய் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டு வருகிறார். நடிகர் ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரி, எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி இருந்தது. இதில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இப்போதுள்ள இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதத்தில் வெளியான இந்த திரைப்படம் ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது நடிகர் ஜெய் இப்பொழுது எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித் துணிக என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கேப் மாரி படத்திற்கு பிறகு நடிகை அதுல்யா ஜெய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் அதிரடி ஆக்ஷன் கதை கருவில் தயாராகியிருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ஜெய் முடித்து விட்டதாக போட்டோ வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *