ஆந்திரா மழை சேதங்களை மத்திய ஆய்வுக் குழு பார்வையிட வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் – Dinaseithigal

ஆந்திரா மழை சேதங்களை மத்திய ஆய்வுக் குழு பார்வையிட வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 18,19-ந் தேதிகளில் சித்தூர் கடப்பா நெல்லூர் அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பலத்த சேதமடைந்துள்ளது. தற்போது ஆந்திர மாநில அரசுக்கு வெள்ள சேத நிவாரண நிதியாக ரூ. 1000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலியாகியுள்ளனர். 25 பேரை இதுவரை காணவில்லை. திருப்பதி, திருமலை, நெல்லூர், மதனபள்ளி, ராஜம்பேட்டை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் 196 மண்டலங்கள் 1,402 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன. உடனடியாக மத்திய அரசு ஆய்வுக் குழுவை அனுப்பி வைத்து சேதங்களை பார்வையிட வேண்டும் என கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *