இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்..!! – Dinaseithigal

இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்..!!

இளநீர் அதிகளவில் உட்கொள்வது நம்மை கழிப்பறையை நோக்கி அதிக முறை ஓட வைக்கும். அதாவது அதிகம் சிறுநீர் கழிக்க வைக்கும், இளநீரில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம் இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. அதன்படி அதிகபடியான நீரை வெளியேற்ற சிறுநீரகங்கள் உழைப்பின் தேவை அதிகமாக உள்ளது, இது தொடர்ந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என நினைத்து மற்ற பழச்சாறுகளுக்கு மாற்றாக இதை பலரும் குடிக்கின்றனர். ஆனால் ஒரு கப் தேங்காய் நீரில் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இளநீர் தினமும் குடிக்க கூடாது.

தேங்காய் தண்ணீர் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். அதிகப்படியான தேங்காய் நீரைக் குடிப்பது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும். குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய் தண்ணீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *