நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் குவிப்பு – Dinaseithigal

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் குவிப்பு

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வாலும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இதில் 13 ரன்களில் அகர்வால் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து புஜாரா களத்துக்கு வந்தார். தற்போதைய நிலவரப்படி கில் 35 ரன்களுடனும், புஜாரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் ஸ்கோர் 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *