ஆசிரியருக்கு சரமாரியாக விழுந்த கத்திகுத்து -தப்பியோடிய சிறுமி மற்றும் சிறுவன் – Dinaseithigal

ஆசிரியருக்கு சரமாரியாக விழுந்த கத்திகுத்து -தப்பியோடிய சிறுமி மற்றும் சிறுவன்

இலங்கையில் காலி போத்தல பகுதியில் சிறுமியும் சிறுவனும் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளதாக போத்தல பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் காலி போத்தல, காசிதெனிய பிரதேசத்தில் வசித்து வரும் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு மூன்று சக்கர வாகனத்தில் சென்ற 16 வயதான சிறுமியும் சிறுவனும் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி விட்டு தப்பித்து போயிருக்கின்றனர் . இந்த சம்பவத்தில் காயமடைந்த பத்தேகம பிரதேசத்தில் உள்ள பள்ளியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ( 45 வயது) பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியர், கத்தியால் குத்திய 16 வயதான சிறுமியின் தாயாருடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும் அது குறித்து விசாரிக்க சிறுமி ஆசிரியரின் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த கத்தி குத்து சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *