சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவு – Dinaseithigal

சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவு

கேரளாவில் பெய்து வரும் கனமழை, மலைப்பிரதேசங்களில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு வரும் முன் பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. கடந்த 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை முன் பதிவு செய்த பக்தர்களில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வந்து உள்ளனர். அதேபோல் தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு இருந்த போதிலும், குறைவான பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கிறார்கள். அதிகபட்சமாக ஒரேநாளில் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர். பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால் வருமானமும் கடந்த சீசனை விட குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *