November 25, 2021 – Dinaseithigal

முளைவிட்ட பூண்டு உயிருக்கே ஆபத்தா?

முளைவிட்ட பூண்டு மற்றும் வெங்காயம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். சிலருக்கு நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை, குடல் எரிச்சல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். முளைவிட்ட பூண்டை அதிகமாக உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது மூளைக்கு விஷம் என்கின்றனர். இவை மூளைக்கான இரத்த ஓட்டத்தை தடை செய்யக் கூடும் என்று கூறப்படுகின்றது. இதனால் எதிர்மறை சிந்தனைகள், மனப்பதட்டம், கோபம், போன்ற விஷயங்கள் அதிகமாகும்.

Read More

சத்தான பொரிகடலை அரிசி கஞ்சி

தேவையான பொருட்கள் கைக்குத்தல் அரிசி – 4 டீஸ்பூன் பொரிகடலை – 2  டீஸ்பூன் சுக்குத்தூள் – ½  டீஸ்பூன் செய்முறை அரிசியை நன்றாக கழுவி வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்ததும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக உப்பி வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். அதே போல் அடுத்து கடாயில் பொரிகடலையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும். இரண்டும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து …

Read More

உடல் இளமைக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்

உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் உங்கள் உடலை இளமை ததும்பச் செய்ய முடியாது. உடல் இயக்கத்தை சீராக்கி, சிறப்பாக்க தினமும் 45 நிமிட இலகுவான உடற்பயிற்சி அவசியம். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்றவை எலும்பு, மூட்டுகளின் இயக்கத்திற்கு சிறந்த பயிற்சிகள் என்றாலும், இவைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும் தினமும் முக்கால் மணிநேரம் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியையாவது செய்யுங்கள். வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நம்பியிருக்காமல் நீங்களே செய்யுங்கள். வீட்டிலே சிறிதாக ஒரு தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள். சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உடலுக்கு …

Read More

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : சென்னையில் இடியுடன் கூடிய கனமழை

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது  இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Read More

பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்

பெண்களுக்கு உடல் பருமன், மரபியல், உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களாலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ‘மேமோகிராம்’ எனும் பரிசோதனையை வருடத்துக்கு ஒரு முறை செய்து கொள்வது நல்லது. இதைத்தவிர சுய பரிசோதனை மூலமும் மார்பகங்களில் கட்டிகள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் உள்ளதா? என்பதை பெண்கள் தெரிந்து கொள்ளலாம்.

Read More

பிரியாணியை சூடு செய்து சாப்பிட்டால் என்னவாகும்?

நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்துவதால் அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும். அதே சமயம் சூடுபடுத்திய பிரியாணியுடன் குளிர்பானங்களைச் சேர்த்து குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

Read More

இரவில் கீரை வேண்டவே வேண்டாம்…

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் உடனே உறங்குவதால் தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும். கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார் சத்துக்களை ஜீரணிக்கக்கூடிய தன்மைகள் இரவில் குறைவாகவே சுரக்கும். அதனால் கீரை ஒருவித மந்தநிலையை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது.

Read More

மலச்சிக்கலில் இருந்து விடுபடுவது எப்படி?

ழங்கள், கீரைகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், ஓட்ஸ், கோதுமை, சியா விதைகள் மற்றும் நட்ஸ் வகைகளில் அதிக அளவில் நார்ச்சத்துகள் நிறைந்து உள்ளன. ஒருவர் ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இருப்பினும் அதிக அளவு நார்ச்சத்து உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் மோசமடையும். எனவே ஒரு நாளைக்கு நார்ச்சத்து 70 கிராமுக்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Read More

ஆரஞ்சு பழம் ஏற்படுத்தும் தீமைகள் என்ன?

ஒருவர் தினமும் 4 முதல் 5 ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டால், அதனால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும். இது வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.  வைட்டமின் சியை அதிகமாக எடுத்துக்கொள்வது நெஞ்செரிச்சல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆரஞ்சு பழங்கள் அதிகமாக அமிலத்தன்மை கொண்டவை, இது உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் (ஜி.யி.ஆர்.டி) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே இவர்கள் எடுத்து கொள்ள கூடாது.

Read More

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது எவ்வளவு நன்மை தெரியுமா?

பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து இதயம் பலமாகும். அதுபோல மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் அதிக பலன் கிடைக்கும். ஆண், பெண் என இரு பாலர்களுக்கும் ஏற்படும் பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். தேள் கொட்டின இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் தலைக்கு ஏறாது. தலை பகுதியில் சொட்டை …

Read More