உடுமலையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு – Dinaseithigal

உடுமலையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

உடுமலை:

உடுமலை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 41). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்றிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய ஜெயசீலன் வீட்டை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 2.5 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் 1 பவுன் தங்க தோடு ஆகியவற்றை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஜெயசீலன் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *