தென்பகுதியில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம் – Dinaseithigal

தென்பகுதியில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்

இலங்கையில் தென்மராட்சி பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றை உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக சொல்லப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றையே இப்படி புதைக்க முற்பட்டதாககூறப்பட்டுள்ளது. இதில் மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு சமீபத்தில் இருக்கும் பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் தன்னுடைய தாயாருடன் இணைந்தே பிறந்த குழந்தையை புதைப்பதற்கு முயன்றுள்ளனர். இதில் அந்த குழந்தையை புதைக்க முயன்றபோது குழந்தை அழுததால் அந்த வீட்டிற்கு பக்கத்திலுள்ளவர்கள் சென்று பார்த்த போதே விபரீதம் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *