November 2021 – Dinaseithigal

பூசணி விதையில் இருக்கும் மருத்துவ பலன்கள்..!

வயதுவந்த 345 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆறு மாதங்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தினமும் உலர்ந்த பூசணி விதைகள் உண்ண கொடுக்கப்பட்டது. பூசணி விதைகள் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் போன்றவற்றை தோற்றுவிக்கின்றன. இதனால் உங்கள் உடலின் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது. இதை தவிர, நாள் முழுவதும் உற்சாக மிகுதியாக இருக்க இந்த பூசணி விதைகள் உதவுகின்றன.

Read More

சிட்னியிலிருந்து வந்த விமானத்தின் விமானிகளும், சிப்பந்திகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிட்னியிலிருந்து வந்த விமானத்தின் விமானிகளும், சிப்பந்திகளும் சுயமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அவர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டதாகச் சொன்ன அந்நிறுவனம், கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கவில்லை. SQ 211 விமானத்தில் வந்த, ஆப்பிரிக்காவின் தென்பகுதியைச் சேர்ந்த பயணிகள் இருவருக்கு ஒமக்ரான் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது. வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அதிகாரிகளுடன் அணுக்கமாய்ப் பணியாற்றுவதாகவும் அது சொன்னது.

Read More

எப்போதும் இளமையாக இருக்க செய்ய வேண்டியவை..!

* காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவ வேண்டும். உள்ளங்கைகளைக் குவித்து நீரைப் பிடித்து, அதற்குள் உங்கள் கண்களைத் திறந்து திறந்து மூடுங்கள். இப்படிச் செய்வதால் முகத்திலும் கண்களிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணர்வீர்கள். * நன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும். * வெந்நீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிக்கும்போது உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். * …

Read More

பலாப்பழத்தில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..!

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் மக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை போக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.பலாப்பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். பலாப்பழ கொட்டைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு அதை நன்கு அரைத்து, முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் …

Read More

தனது பிறந்தநாளில் மரக்கன்று நட்ட ராஷி கண்ணா

2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இருக்கிறார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Read More

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

தெலுங்கு சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, அவருடைய இயல்பான நடிப்பும் சின்சியாரிடியும் ரிது வர்மாவுக்குத் தமிழில் அதிக படங்களைக் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்திருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் கணம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் கண்டனம்

முன்னணி நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அழகு சாதன பொருட்களை போட்டி போட்டு விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இதனை மிஞ்சும் வகையில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.

Read More

வாலி படத்தின் இந்தி ரீமேக்… பிரபல இயக்குனர் வழக்கு?

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வாலி. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருப்பதாகவும் ரீமேக் பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும், ரீமேக் உரிமை திரைக்கதை எழுதியவருக்கே உண்டு என்ற சமீபத்திய ஆரண்ய காண்டம் பட வழக்கில் வெளியான கோர்ட்டு தீர்ப்பை சாதகமாக எடுத்துக்கொண்டு திரைக்கதை தன்னுடையது என்பதால் வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து …

Read More

களியக்காவிளை அருகே வீட்டில் நகை-பணம் கொள்ளை

களியக்காவிளை: களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.குடும்பத்தினர் அனைவரும் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள 3 மோதிரங்களையும் திருடி சென்றனர். இதுகுறித்து அவருடைய மனைவி லலிதா களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி …

Read More

தங்கும் விடுதியில் பைனான்ஸ் ஊழியர் தற்கொலை

கோவை: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது31). இவர் குஜராத்தில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25ந் தேதி விஜயகுமார் கோவை வந்தார். காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று இவர் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறைக்கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து …

Read More