ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்பு ஏற்பாடு – Dinaseithigal

ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்பு ஏற்பாடு

தீபாவளி திருநாளினை முன்னிட்டு ஈஷா சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற யோகா வகுப்பு ஆன்லைன் வாயிலாக நவம்பர் 12-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை தமிழக மக்களுக்கு இலவசமாக நடைபெற உள்ளது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை என 3 வேளைகளில் இவ்வகுப்பு தினமும் 2 மணி நேரம் நடக்கும். பங்கேற்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதில் ஏதேனும் ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்வது அவசியம். isha.co/uno-pb என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய உதவி தேவையெனில் 7383673836 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யலாம். முன்பதிவு நவம்பர் 5-ம் தேதி இரவு 9 மணியுடன் நிறைவு பெறும் என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *