இனி வரும் போட்டிகளில் மண்டியிட்டு ஆதரவு கொடுப்பேன் : சர்ச்சைக்கு முடிவு கட்டிய டிகாக் – Dinaseithigal

இனி வரும் போட்டிகளில் மண்டியிட்டு ஆதரவு கொடுப்பேன் : சர்ச்சைக்கு முடிவு கட்டிய டிகாக்

வீரர்கள் கருப்பின மக்களுக்கு ஆதரவாக மண்டியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் குயிண்டன் டிகாக் மட்டும் மைதானத்தில் அதனை செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், டிகாக் ஒரு இனவெறி பிடித்த நபர் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இனவெறி குற்றச்சாட்டுக்கள் குறித்து டிகாக் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் மண்டியிட்டு ஆதரவு கொடுக்காததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை செய்யவில்லை. அப்படி காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள். நான் ஒருவேளை இனவெறி பிடித்தவனாக இருந்திருந்தால் அன்றைய தினம் பொய்யாக மண்டியிட்டுவிட்டு நாடகமாடி இருப்பேன். இனவெறி பிடித்தவன் என்று கூறியது வேதனை அளிக்கிறது. இனி வரும் போட்டிகளில் மண்டியிட்டு ஆதரவு கொடுப்பேன் என டிகாக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *