முக்கிய துறைமுகத்தில் தரையிறங்கிய விலையுயர்ந்த வாகனங்கள் – Dinaseithigal

முக்கிய துறைமுகத்தில் தரையிறங்கிய விலையுயர்ந்த வாகனங்கள்

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும் சுமார் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி தரையிறங்கிய இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமா இல்லையா என இலங்கை சுங்க திணைக்களம் நிதி அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. போன வருடம் செப்டம்பர் மாதம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்த நிலையில் இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தற்போது அந்த வாகனங்கள் சட்டத்திற்கு முரணாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *