இலங்கை ராணுவ தளபதிக்கு ரஷ்யாவில் கொடுக்கப்பட்ட கௌரவம் – Dinaseithigal

இலங்கை ராணுவ தளபதிக்கு ரஷ்யாவில் கொடுக்கப்பட்ட கௌரவம்

சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவின் விடுத்த அழைப்பின் பேரில் அதிகாரப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது என ராணுவ ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. அங்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கேற்ப ரஷ்ய பாதுகாப்பு அமைச்சிற்கு ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு, ரஷ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவுடனான உள்ளக பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *