கர்நாடகாவில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – Dinaseithigal

கர்நாடகாவில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகா மாநிலம் குடகில் உள்ள மடிகேரியில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடரந்து பள்ளி நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சில மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள 287 மாணவர்களிடமும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது 33 மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்த பெரும்பாலான மாணவர்கள் அறிகுறியற்றவர்கள். மற்ற மாணவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதார அதிகாரி இன்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *