சொத்தைப்பல் வலிக்கு நிவாரணி – Dinaseithigal

சொத்தைப்பல் வலிக்கு நிவாரணி

பூண்டு பல்லுடன் இரண்டு கல் உப்பு வைத்து பாதிக்கப்பட்ட பல் மேல் வைத்து வாயை மூடிவிடுங்கள். இதனால் பூண்டில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் வலியைக் குறைத்து சற்று இலகுவாக இருக்கும்.

வெதுவெதுப்பான சுடுநீர் கூட பல் வலிக்கு இதமாக இருக்கும். எனவே வெதுவெப்பான நீருடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வாயை நன்கு கொப்பளித்து துப்புங்கள். இதை வலி வரும்போது மட்டுமல்ல பொதுவாகவே உணவு சாப்பிட்டபின் செய்து வந்தால் உணவுத் துகள்கள் சிக்கி இருந்தாலும் வெளியேறும். சொத்தைப் பல் வருவதையும் தவிர்க்கலாம்.

கற்பூரமும் சொத்தைப் பல் வலிக்கு நிவாரணி. எனவே அதை சிறு கட்டி எடுத்துக்கொண்டு வலியை உண்டாக்கும் பல்லின் மீது வைக்க வலி குறையும்.

கிராம்பை வலி இருக்கும் பல்லின் மீது வைத்து வாயை மூடிவிட பல் ஈறுகள் ஜிவ்வென இழுக்கும். இதனால் வலி சற்று குறைந்து இலகுவாக இருக்கும். கிராம்பு எண்ணெய் இருந்தாலும் அதை பல் மீது தடவலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *