சூடான நீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் – Dinaseithigal

சூடான நீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

சூடான நீர் செரிமான மண்டல செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாய் இருக்கும். சூடான நீராக இருந்தாலும் குளிர்ந்த நீராக இருந்தாலும் உடலுக்கு தேவையான நீர் அருந்துவது முக்கியம். இல்லையென்றால் மன நலம் மற்றும் மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படைய வாய்ப்பு உள்ளது.

எந்த வெப்பநிலை நீராக இருந்தாலும் அதனை பருகுவது நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். பெண்கள் தினமும் 2.3 லிட்டர் நீரும், ஆண்கள் 3.3 லிட்டர் நீரும் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தாய்மார்கள், கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் பருகுவது அவசியம். சூடான நீரை பருகி அந்த நாளை தொடங்குவது சிறப்பானது. கதகதப்பான நீருடன் கொஞ்சம் உடற்பயிற்சி செய்து வருவது சிறந்தது.

மிதமான சுடுநீரில் குளிப்பது ரத்த ஓட்டம் துரிதமாக செயல்பட உதவும். இரவு நேரத்தில் வெந்நீரில் குளியல் போடுவது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும். அவ்வாறு குளிப்பதால் ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றி சிறுநீரகங்களையும் பாதுகாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *