நாகூரில் டீக்கடையை சூறையாடிய 3 வாலிபர் கைது – Dinaseithigal

நாகூரில் டீக்கடையை சூறையாடிய 3 வாலிபர் கைது

நாகூர்:

நாகூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் சுந்தரராஜ் (வயது 30) என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 3 வாலிபர்கள் சிகரெட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது சுந்தரராஜ் அருகில் பெட்ரோல் பங்க் இருப்பதால் சிகரெட் விற்பனை செய்வது இல்லை என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 3 வாலிபர்களும் கடையை அடித்து உடைத்து சூறையாடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் அமல்ராஜ் (30), அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் வினோத்குமார் (21), வடக்கு தெருவை சேர்ந்த பெத்தான் மகன் ஜோதிபாஸ் (24) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *