இன்று மியூசிக் டைரக்டர் அனிருத்துக்கு பிறந்ததினம் – Dinaseithigal

இன்று மியூசிக் டைரக்டர் அனிருத்துக்கு பிறந்ததினம்

திரைத்துறையில் சிறந்த சேவைக்காக இதுவரை 2 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 9 சைமா விருதுகள், 6 எடிசன் விருதுகள், 5 விஜய் விருதுகளை பெற்றுள்ளார் அனிருத். இவர் இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அனிருத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . இசை பரம்பரையில் வந்த அனிருத், பள்ளி படிக்கும் போதே பியானோ வாசிக்க பயின்றவர். லண்டன் இசை கல்லூரியில் Sound Engineering முடித்த அனிருத், விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோவில் டைட்டில் வென்றவர். தொடக்கத்தில் குறும்படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத், 2012 ம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷ், இயக்குனராக அறிமுகமான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *