தோல்வியால் மனமுடைந்து அழுத டெல்லி அணி வீரர்கள் – Dinaseithigal

தோல்வியால் மனமுடைந்து அழுத டெல்லி அணி வீரர்கள்

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் இன்று 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த முறையும் கடைசி வரை தோல்வியை சந்தித்த ஏக்கத்தில் டெல்லி அணி வீரர்கள் அழுதனர். போட்டி முடிந்த பிறகு பேசிய ரிஷப் பண்ட், இப்போது பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. கடைசிவரை வெற்றி பெற்றுவிடுவோம் என நம்பினோம். இறுதிகட்டம் வரை ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக நகர்த்தினோம். ஆனால் கடைசியில் நாங்கள் நினைத்ததுபோல் நடக்கவில்லை. மிடில் ஓவர்களின்போது கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இதனால், எங்களால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய முடியவில்லை. நாங்கள் சிறப்பாக விளையாடினோம். வெற்றி, தோல்விகளை சந்தித்துதான் ஆக வேண்டும். நிச்சயம் அடுத்த சீசனில் கம்பேக் கொடுப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *