ரிஷப் பண்ட்-ஆல் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி – Dinaseithigal

ரிஷப் பண்ட்-ஆல் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் இன்று 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சார்ஜா போன்ற சிறிய மைதானத்தில் ஸ்பின்னர்களின் ஓவர்களை முன்கூட்டியே வீசி முடிக்க வேண்டும். ஆனால் இலக்கு சிறியதாக இருந்ததால் ரிஷப் பண்ட் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் முன்கூட்டியே பயன்படுத்தி விட்டார். இதன் காரணமாக கடைசி ஓவரை வேறு வழியின்றி அஷ்வின் வீச வேண்டியதாயிற்று. கடைசி ஓவரில் ஸ்பின்னர்கள் வீசும்போது எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. எனவே ஏதேனும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை இறுதி ஓவருக்காக வைத்திருந்திருக்க வேண்டும் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *