அமெரிக்காவில் 40 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் – Dinaseithigal

அமெரிக்காவில் 40 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டப்படுத்தும் வகையில், மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 40,35,76,826 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதில் 21,74,03,897 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 18,77,14,829 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *