இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த சுப்பிரமணிய சாமி – Dinaseithigal

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த சுப்பிரமணிய சாமி

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் 2 நாள் தனிப்பட்ட பயணமாக இலங்கை சென்றுள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி, கொழும்புவில் உள்ள பிரதமர் ராஜபக்சேவின் அலுவலக இல்லத்தில் நடந்த நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

தனது இல்லத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் தனது நண்பர் சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக ராஜபக்சே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். தனது பயணத்தில் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சாமி இன்று, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *