சீரியலுக்காக பெண்வேடமிட்ட பிரபல நடிகர் – Dinaseithigal

சீரியலுக்காக பெண்வேடமிட்ட பிரபல நடிகர்

சன்டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தைப்போல. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சின்னராசுவின் தங்கை துளசி யாரை திருமணம் செய்யப்போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

வெற்றி-துளசி காதலித்து வந்த நிலையில் அவர்களுக்குள் சில பிரச்சனை ஏற்பட துளசி அவரது மாமாவை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார். ஆனால் வெற்றி இந்த திருமணத்தை நிறுத்த பெண் வேடம் போட்டு சில பிளான்கள் செய்கிறார். தற்போது வெற்றியின் பெண் வேட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அட இவரா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *