கென்யாவை சேர்ந்த இளம் தடகள வீராங்கனை மர்ம மரணம் – Dinaseithigal

கென்யாவை சேர்ந்த இளம் தடகள வீராங்கனை மர்ம மரணம்

கென்யாவை சேர்ந்த 25 வயது தடகள வீராங்கனை அக்னஸ் ட்ரோப். நேற்று அதிகாலை வயிற்றில்  காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அவரது மரணத்திற்கான  காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது  குறித்து கென்யாவின் சர்வதேச தடகள  கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கென்யா சர்வதேச அரங்கில் வேகமாக வளர்ந்து வரும் தடகள ஜாம்பவான்களில் ஒரு மாணிக்கத்தை இழந்துள்ளது. தடகளத்தில் பல கண்கவர் நிகழ்ச்சிகளை காண்பித்த அக்னஸ் அவர்களுக்கு நன்றி  என கூறிப்பிட்டுள்ளார்.

அக்னஸ் ட்ரோப் கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10,000 மீ  ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றவர்.  சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில்  5,000 மீ  ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டு நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *