இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸ்-க்கு கொரோனா தொற்று – Dinaseithigal

இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸ்-க்கு கொரோனா தொற்று

இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹீமா தாஸ். இந்த மாத இறுதியில்  பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் தொடங்க உள்ள தடகளத்திற்கான தேசிய முகாமிற்கு தயாராகும் வீதமாக முகாமிற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தார் ஆனால் அவருக்கு நேற்று நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:

எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது .நான் தற்போது தனிமையில் இருக்கிறேன். எனது உடல்நிலை சீராக  உள்ளது. இந்த நேரத்தில் முன்பு இருந்ததை விட மேலும் வலிமையாக மீண்டு வர நான்  முயற்சி செய்வேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்  என கூறியுள்ளார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான ஹீமா தாஸ் கடந்த 2018 ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த  ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400மீ தூரத்தை  50.79 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *