சப்போட்டாவில் உள்ள சத்துக்கள் என்ன? – Dinaseithigal

சப்போட்டாவில் உள்ள சத்துக்கள் என்ன?

சப்போட்டா, நார்ச்சத்து கொண்டது. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன. சப்போட்டா பழத்தில் வைட்டமின்-சி அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ‘வைட்டமின்-சி’ கிடைக்கிறது.

தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும், நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் ‘வைட்டமின்-சி’ யின் பங்கு மகத்தானது. அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இதுபோக பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும், போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *