தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் ரயில் மோதி பலி – Dinaseithigal

தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் ரயில் மோதி பலி

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ் நகரில், நேற்று முன்தினம் இரவு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.  அப்போது உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6 மணிக்கு இந்த தண்டவாளத்தில் ரெயில் வந்தது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகளை ரெயில் டிரைவர் கவனிக்காததால் அவர்கள் மீது ரெயில் ஏறியது.

இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு அகதிக்கு கால் உடைந்தது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *