அமெரிக்காவில் தபால் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு : 2 பேர் பலியானதாக தகவல் – Dinaseithigal

அமெரிக்காவில் தபால் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு : 2 பேர் பலியானதாக தகவல்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் பெப்சிஸ் நகரின் கிழக்கு லேமர் கேரியர் அனெக்ஸ் பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அலுவலகத்தில் வேலை செய்துவந்த ஒரு ஊழியர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் தபால் அலுவலக ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தபால் ஊழியர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *