பாபநாசம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது – Dinaseithigal

பாபநாசம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

பாபநாசம்:

பாபநாசம் பகுதியை சேர்ந்த யோகேஷ் (வயது 21) என்பவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி கடைக்கு பொருள் வாங்க சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது வண்டி திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து யோகேஷ் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த முருகானந்தம் (49) என்பவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் சிவக்குமார் அவருக்கு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *