ஓசூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது – Dinaseithigal

ஓசூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

ஓசூர்:

ஓசூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷோபா (வயது35). இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 6 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஓசூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பேரிகை பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பதும், ஷோபாவிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *