வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரபல நடிகை : காவல் நிலையத்தில் புகார் – Dinaseithigal

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரபல நடிகை : காவல் நிலையத்தில் புகார்

மும்பை

தமிழில், அன்பே ஆருயிரே, லீ, ஜாம்பவான், மருதமலை, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிலா. மீரா சோப்ரா என்ற பெயர் கொண்ட இவர் அதே பெயரில் தெலுங்கு மற்றும் இந்தியில், படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த வீட்டின் உள் கட்டமைப்புக்காக,  டிசைனர் ராஜிந்தர் திவானுடன் ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தார். முதல் கட்டமாக ரூ.8 லட்சத்தைக் கொடுத்தார். பின்னர் அவர் பனாரஸில் நடந்த சினிமா படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்.

15 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்து புதிய வீட்டைப் பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலிவான பொருள்களை உபயோகித்து அவர் உள்கட்டமைப்பு பணிகளை செய்து இருந்தார். இதனால் கோபமான அவர், அவரிடம் விசாரித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி மீரா சோப்ரா கூறும்போது, கேள்வி கேட்டதும், என்னை என் வீட்டில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, இப்படிக் கேள்வி கேட்டால் வேலை செய்ய மாட்டேன் என மிரட்டினார். பிறகு அவருடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகச் செய்தி அனுப்பினேன். அதற்கு அவர் மேலும் மோசமாகத் தாக்கிப் பேசத் தொடங்கினார்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து மும்பை போலீஸ்நிலையத்தில் ராஜிந்தர் மீது மீரா சோப்ரா புகார் அளித்து உள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *