உத்தர பிரதேசத்தில் தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்- முக்கிய குற்றவாளி கைது – Dinaseithigal

உத்தர பிரதேசத்தில் தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்- முக்கிய குற்றவாளி கைது

நொய்டா:

உத்தர பிரதேச மாநிலம் கவுதமபுத்தா நகர் மாவட்டம் ஜேவார் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 55 வயது பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பாலியல் வன்கொடுமை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 4 குற்றவாளிகளில் திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான மகேந்திரன் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *