இந்திய அணியில் இடம்பிடித்த தாகூர் : அக்சர் பட்டேலுக்கு கல்தா – Dinaseithigal

இந்திய அணியில் இடம்பிடித்த தாகூர் : அக்சர் பட்டேலுக்கு கல்தா

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 7-வது டி20 உலக்கோப்பை தொடருக்காக இந்தியஅணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 15 பேர்கொண்ட இந்த அணிக்கு விராட்கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அவர்களில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியானது. ஹர்திக் பாண்ட்யா ஐ.பி.எல். போட்டியில் பந்து வீசவில்லை.

இந்நிலையில், டி20 உலக கோப்பை 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு இவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.  . அக்சர் பட்டேல் மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். காயத்தில் இருந்து சமீபத்தில் குணமடைந்த ஹர்திக் பாண்ட்யா தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *