லக்கீம்பூர் விவகாரம்- ராகுல் காந்தி தலைமையில் ஜனாதிபதியிடம் மனு – Dinaseithigal

லக்கீம்பூர் விவகாரம்- ராகுல் காந்தி தலைமையில் ஜனாதிபதியிடம் மனு

புதுடெல்லி:

லக்கீம்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் இன்று சந்தித்தனர். பிரியங்கா, குலாம்நபி ஆசாத், மல்லி கார்ஜூன கார்கே, ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோரும் ஜனாதிபதியை சந்தித்தனர்.

காங்கிரஸ் குழு, ஜனாதிபதியிடம் மனு ஒன்றை அளித்தனர். லக்கீம்பூர் வன்முறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள். இந்த வன்முறையில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் குழு தனது மனுவில் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *