மணிப்பூரில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு – 5 பேர் உயிரிழப்பு – Dinaseithigal

மணிப்பூரில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு – 5 பேர் உயிரிழப்பு

இம்பால்:

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம் ஹிங்கொஜங் பகுதியில் கடந்த 10-ம் தேதி குகி பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டனர். இவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கு பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், கிராமத்தினர் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *