ஐபிஎல் கிரிக்கெட் : கொல்கத்தா அணிக்கு 136 ரன்கள் இலக்கு – Dinaseithigal

ஐபிஎல் கிரிக்கெட் : கொல்கத்தா அணிக்கு 136 ரன்கள் இலக்கு

ஷார்ஜா:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பிளே ஆப் சுற்றின் இரண்டாவது குவாலிபயர் ஆட்டம் இன்று ஷார்ஜாவில் நடக்கிறது.  இதில் ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மார்கன், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிர்னையக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர் பிருத்வி ஷா 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்டாய்னிஸ் 18 ரன்களும் சேர்த்தனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களே சேர்த்தது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார். பெர்குஷன், ஷிவம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *