சோலோ ஹீரொயினாக களமிறங்கும லட்சுமி மேனன் – Dinaseithigal

சோலோ ஹீரொயினாக களமிறங்கும லட்சுமி மேனன்

விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.

அதன்பிறகு படங்களில நடிக்காமல் இருந்த அவர், சமீபத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்த லட்சுமி மேனன், தற்போது முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *