இந்தியாவில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா பாதிப்பு – Dinaseithigal

இந்தியாவில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி:

இந்தியாவில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 1ஆயிரத்து 743 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் 106, மகாராஷ்டிராவில் 43 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 226 பேர் இறந்துள்ளளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,51,189 ஆக அதிகரித்துள்ளது. நோயின் பிடியில் இருந்து மேலும் 22,844 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 901 ஆக உயர்ந்தது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,07,653 ஆக சரிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *