சிவகங்கை அருகே வாலிபர் தற்கொலை – போலீசார் விசாரணை – Dinaseithigal

சிவகங்கை அருகே வாலிபர் தற்கொலை – போலீசார் விசாரணை

சிவகங்கை:

சிவகங்கை டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீபா (22) என்ற பெண்ணை கடந்த 8 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். பிரதீபா 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துசென்று மருத்துவ சிகிச்சை அளித்தார். ஆனால் சிசிக்சை பலனின்றி பிரதீபா கடந்த 10-ந் தேதி இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இருந்த பிரசாத் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *