தமிழகத்தில் புதிதாக 1,280 பேருக்கு கொரோனா பாதிப்பு – Dinaseithigal

தமிழகத்தில் புதிதாக 1,280 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை:

தமிழகத்தில் புதிதாக 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 15,650 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,453 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 30 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 35,833 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *