நான் உரிமையாளராக இருந்திருந்தால் கோலி கேப்டனாக தொடர கேட்டிருப்பேன் – பிரைன் லாரா – Dinaseithigal

நான் உரிமையாளராக இருந்திருந்தால் கோலி கேப்டனாக தொடர கேட்டிருப்பேன் – பிரைன் லாரா

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவிலான  போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். தற்போது பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக கூறி விராட்கோலி இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியைராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியில் விலகவுள்ள நிலையில், ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பெங்களூர் அணியின் உரிமையாளராக நான் இருந்திருந்தால் விராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க சொல்லி இருப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேப்டன் பொறுப்பை தொடருமாறு கேட்டிருப்பேன். மிகவும் திறமை வாய்ந்த, வயதில் இளையவரான அவர் எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார். இத்தகைய சூழலில் அவர் வேறொரு வீரரின் கீழ் ஆடுவதை நான் பார்க்க விரும்பவில்லை. கோலி கேப்டனாக இல்லாத பெங்களூர் அணி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *