October 13, 2021 – Dinaseithigal

கேரட் பற்றி தெரியாத உண்மைகள்

கேரட்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் கேரட்டை சாப்பிடும்போது, ​​அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம். அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும். ஏனென்றால், கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும். அதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.

Read More

செங்கம் அருகே வாகனம் மோதிய விபத்தில் பெண் பலி

செங்கம்: கரியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது32). இளங்குன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36) உள்ளிட்ட இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

பீட்ரூட்டை அதிகளவுக்கு உட்கொள்ளலாமா?

பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனை சிலர் சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் கலந்து சாப்பிடுகிறார்கள். பலர் பீட்ரூட்டை சாறு எடுத்து பருகுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்றாலும் அளவோடுதான் பருக வேண்டும். பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்கு காரணம் பீட்ரூட்டிற்குள் காணப்படும் மூலக்கூறுகள்தான். அதுபற்றி பயப்படத்தேவையில்லை என்றாலும் பீட்ரூட்டை குறைந்த அளவு உட்கொள்வதுதான் நல்லது.

Read More

சப்போட்டாவில் உள்ள சத்துக்கள் என்ன?

சப்போட்டா, நார்ச்சத்து கொண்டது. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன. சப்போட்டா பழத்தில் வைட்டமின்-சி அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ‘வைட்டமின்-சி’ கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும், நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் ‘வைட்டமின்-சி’ யின் பங்கு மகத்தானது. அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இதுபோக பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும், …

Read More

பல் துலக்கும்போது இதை செய்யாதீர்கள்

பல் துலக்கும்போது பற்களின் மேல் பகுதியை சுத்தம் செய்வதற்குத்தான் அதிக நேரம் செலவிடப்படுகிறது. ஈறுகளுக்கு இடையில் உள்ள பகுதிகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. ஈறுகளில் ரத்தப்போக்கு, பல்வலி போன்ற பிரச்சினைகள் இதனால்தான் உண்டா கின்றன. பிரஷை 45 டிகிரி கோணத்தில் வளைத்து பற்களை சுத்தப்படுத்த வேண்டும். சாப்பிட்ட பிறகு பற்களில் தங்கி இருக்கும் உணவு துகள்களை அகற்றுவதற்கு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலர் சாப்பிட்ட பிறகும் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் சாப்பிட்ட பிறகு கால் மணி நேரம் …

Read More

துளசி விதைகளில் இப்படி ஒரு நன்மையா?

துளசியின் விதையை பாலில் கலந்து குடிக்கும்போது நல்ல கிருமி நாசினியாக செயல்படுகிறது. உடலில் உள்ள அனைத்து விதமான கிருமிகளையும் அழித்துவிடுகிறது. துளசி சிறுநீரகத்தை வலுப்படுத்துகிறது. துளசி இலை மற்றும் தேனை தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறைந்து விடும் என்று கூறுகிறார்கள். துளசியை சந்தனத்துடன் சேர்த்து அதை அரைத்து அதை நெற்றியில் தடவி வந்தால் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தமாகவும் வழங்கப்படுகிறது.

Read More

மிளகு நீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்

சூடான நீருடன் மிளகு சேர்த்து பருகுவது குடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். நீரிழப்பை தடுக்கவும் உதவும். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவதற்கும் துணைபுரியும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் வழிவகுக்கும். நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை தினமும் பருக வேண்டும். ஏனெனில் இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஒவ்வொரு நாளும் மலச்சிக்கல் பிரச்சினை குறைந்து வருவதை உணரலாம். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதன் மூலம் வயிற்றுக்கும் இதமாக இருக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் …

Read More

அக்டோபர் 13, இன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

54 – உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார். 1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது. 1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர். 1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான். 1399 – இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடம்யில் நடைபெற்றது.

Read More

 மெக்சிக்கோ பேரரசு விடுதலையை அறிவித்த நாள் அக்டோபர் 13

1644 – சுவீடன்-டச்சு கடற்படையினர் பெகுமாம் சமரில் டென்மார்க் கடற்படையைத் தோற்கடித்து, 1,000 இற்கும் அதிகமானோரைச் சிறைப்பிடித்தனர். 1710 – பிரெஞ்சு அகாடியாவின் தலைநகர் போர்ட்-ரோயல் பிரித்தானியப் படைகளிடம் வீழ்ந்தது. 1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1821 – மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது. 1881 – இன்றைய எபிரேய மொழியின் முதலாவது அறியப்பட்ட உரையாடல் எலியேசர் பெந்யெகுடாவினால் பதியப்பட்டது. 1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச்சு தெரிவு செய்யப்பட்டது.

Read More

2-உலகப்போர் முக்கிய நிகழ்வுகள் அக்டோபர் 13

1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1892 – புகைப்படங்கள் வாயிலாக முதலாவது வால்வெள்ளியை எட்வர்ட் பார்னார்டு கண்டறிந்தார். 1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. 1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. 1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து  செருமனியுடன் போர் தொடுத்தது. 1944 – இரண்டாம் உலகப் போர்:  லாத்வியாவின்  தலைநகர் ரீகா  சோவியத்தின்  செஞ்சேனையினால்  \கைப்பற்றப்பட்டது.

Read More